அகமதாபாத் விமான விபத்து.!!
விமானத்தில் இருந்த 242 பேரும் பலி.!!! (photos)
[2025-06-12 19:13:50] Views:[15]
அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்பதை சில நிமிடங்களுக்கு முன்பு ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது.
இந்தியா, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு பறப்பட்டு மேகனி நகரில் விபத்துக்குள்ளான போயிங் 787-8 விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் இருந்ததாக ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது.
இவர்களில் இந்தியர்கள் 169 பேர், பிரித்தானியர்கள் 53 பேர், 1 கனேடியர் மற்றும் போர்த்துகீசிய நாட்டினர் 7 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் பட்டியலில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தின் மேகனி நகரில் அமைந்துள்ள BJ Medical College’s UG விடுதியில் குறித்த விமானத்தின் வால்பகுதி மோதியதில் விமானம் விபத்துக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.










