பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய இந்திய இராணுவம்: எல்லைப்பகுதியில் மீண்டும் பரபரப்பு.
[2025-07-25 11:11:46] Views:[16]
இந்திய எல்லைக்குட்பட்ட பஞ்சாப் பிரதேசத்தில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக இந்திய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் காணப்படும் அமிர்தசரஸ் எனும் இடத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் பறந்ததை அடுத்து துரிதமாக செயற்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் ஐந்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்த்தியுள்ளனர்.
இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.










