இந்தியா மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு....!!
[2025-07-31 20:18:56] Views:[15]
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
"இந்தியா எங்கள் நட்பு நாடாக இருந்தாலும், அவர்களின் கட்டணங்கள் உலகிலேயே மிக உயர்ந்தவையாக இருப்பதால், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வணிகத்தையே செய்து வருகிறோம்" என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தியா இன்னும் இதற்கு உத்தியோகபூர்வ பதிலை அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










