yarlathirady.com

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்!

[2025-12-30 12:25:55] Views:[7]

பங்களாதேசின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா தனது 80 வயதில் காலமானார்.

இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(30) காலை 6.00 மணிக்கு காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறப்பு வைத்தியர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று (29) தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவர் இன்று (30) காலை 6.00 மணிக்கு காலமானதாக அவரது கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


சினிமாசெய்திகள்
கமல்-ரஜினி நடிக்கும் படத்தின் வில்லன் மம்மூட்டியா..!!
2026-02-28 15:20:20
தமிழ் திரையுலகின் இரு மகா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியாகியதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘கல்கி 2ம் பாகம்’ படப்பிடிப்பில் கமல் - அமிதாப்.
2026-02-26 20:37:40
இந்திய திரையுலகை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,
டிராகன் 2 - ரசிகர்கள் குஷி
2026-02-22 12:04:45
டிராகன் 2
எதிர்நீச்சலில் இருந்து வெளியேறிய நடிகை
2026-02-22 11:00:41
சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது
AK 64 படம் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள்.
2026-02-20 10:32:09
AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.