வெனிசுவேலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி அமெரிக்க இராணுவத்தினரால் கைது..!
[2026-01-04 12:18:42] Views:[7]
வெனிசுவேலா மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா, வெற்றிகரமாக நடத்தியுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, நாட்டிற்கு வெளியே விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










