yarlathirady.com

பாக்கு நீரிணை கடந்து நான்கு சிறுவர்கள் சாதனை...!

[2026-04-21 19:31:46] Views:[89]

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட ஆபத்தான பாக்கு நீரிணை கடற்பகுதியை, ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் இருபுறமும் நீந்திக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ அஷ்வத், இரட்டையர்களான லவ் மற்றும் குஷ் மற்றும் தன்வேஷ் ஆகிய நான்கு சிறுவர்களும் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருந்தாலும், முறையான நீச்சல் பயிற்சி பெற்று ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உலகிற்கு உணர்த்தும் நோக்கில் இந்தச் சவாலான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் முறையான அனுமதியைப் பெற்று, கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையிலிருந்து இவர்களது நீச்சல் பயணம் தொடங்கியுள்ளது.ஜெல்லி மீன்கள் மற்றும் பாறைகள் நிறைந்த ஆழம் குறைந்த சவாலான கடல் பகுதியில், நால்வரும் 'ரிலே' முறையில் ஒருவருக்குப் பின் ஒருவராகத் தொடர்ந்து நீந்தியுள்ளனர்.

சுமார் 17 கடல் மைல் தொலைவை 9 மணி 5 நிமிடங்களில் கடந்த இவர்கள், நள்ளிரவு 12.30 மணியளவில் இலங்கையின் தலைமன்னார் பகுதியை வந்தடைந்தனர்.

அதனைதொடர்ந்து, எவ்வித இடைவேளையுமின்றித் தலைமன்னாரிலிருந்து மீண்டும் தனுஷ்கோடியை நோக்கி நீந்தத் தொடங்கிய சிறுவர்கள், இன்று காலை 9.27 மணியளவில் அரிச்சல் முனையை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளனர். மொத்தம் 34 கடல் மைல் தொலைவை 18 மணி 02 நிமிடங்களில் நீந்திக் கடந்துள்ள இந்தச் சிறுவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களாலும் இத்தகைய கடினமான இலக்குகளை அடைய முடியும் என்பதைத் தங்களது விடாமுயற்சியால் நிரூபித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.