yarlathirady.com

இலங்கை இந்திய டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

[2026-07-29 21:15:02] Views:[81]

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஷுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்த மாதம் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி காலி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பிலும் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டத்திலும் விளையாடுகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ஷுப்மன் கில் (கேப்டன்)
கே.எல்.ராகுல் (துணை கேப்டன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
சாய் சுதர்ஷன்
துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்
மானவ் சுதர்
பும்ரா
முகமது சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
குர்நூர் பிரார்
தேவ்தத் படிக்கல்
சரண்ஷ் ஜெயின்


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21