இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான கேரள கஞ்சா..!!
[2026-07-31 10:38:56] Views:[226]
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை வழங்கிய தகவலின்படி, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்ட விரோத கேரள கஞ்சா நாளைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.










