2027 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இலங்கை உட்பட 10 நாடுகள் நேரடித் தகுதி
[2026-08-12 21:18:22] Views:[71]
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக போட்டியிட்டு ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டியதால் 2027 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்றது.
அயர்லாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியானது முன்னாள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை தகுதிகாண் சுற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளது.
இந்தப் போட்டி முடிவை அடுத்து இலங்கை உட்பட 10 நாடுகள் 2027 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டன.










