இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!
[2026-08-17 15:44:16] Views:[75]
இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் 5.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலநடுக்கம் இன்று இன்றைய தினம் அதிகாலை 12:46 அளவில் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ஆரம்பத்தில் தெற்கு அட்சரேகை 8.57 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 121.55 ஆகிய ஆள்கூறுகளில் அடையாளம் காணப்பட்டது.
இதேவேளை கடந்த 15ஆம் திகதி இந்தோனேசியாவில் 7.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.










