yarlathirady.com

யாழ்ப்பாணத்தில் மக்கள் பயணித்த படகு விபத்து..!!

[2026-08-17 16:10:08] Views:[52]

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து, நெடுந்தீவு நோக்கி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயணித்த தனியாருக்கு சொந்தமான சிறிய ரக படகு, புறப்பட்டு சில நிமிடங்களில் கடுமையான காற்று காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனால், படகில் பயணித்த 10 பேரும் கடலில் மூழ்கினர். அதனை கண்ணுற்றவர்கள், உடனடியாக தமது படகில் விரைந்து அவர்களை மீட்டு, நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

நயினாதீவு வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த படகு விபத்தில், படகோட்டிகள் இருவர், நெடுந்தீவை சேர்ந்த 07 பேர் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருமாக 10 பேர் சிக்கிய நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21