வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் கோவில் கொடியேற்றம் இன்று
[2026-08-17 16:18:34] Views:[57]
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.
நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டதைத் தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










