yarlathirady.com

பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை..!!

[2026-08-18 21:55:27] Views:[41]

கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களின் வசிப்பவர்களுக்கு வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, நாளை பிற்பகல் வேளையில் கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை நிலைக்கு' உயர்வடையும் சாத்தியமுள்ளது.

எனவே, சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுதலும், வெளிப்புற நடவடிக்கைகளும் உடலுக்கு சோர்வை ஏற்படுத்தக்கூடும் என்றும், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் சூரிய ஒளியில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிக நீர் அருந்துமாறும் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21