இம்மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வைப்பு
[2026-08-19 10:52:55] Views:[22]
ஓகஸ்ட் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் இன்றையதினம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரத்து 500 ரூபாய் தொகையை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










