yarlathirady.com

பண்டத்தரிப்பு ஆலய சர்ச்சை: மின் விளக்குகளை கைப்பற்றிய பொலிஸ்..!!

[2026-08-22 21:27:17] Views:[29]

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 20ஆம் திகதி இரவு நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் இதுவரை 400 க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. .

இதுதொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில், குறித்த பகுதியில் நடைபெற்ற திருவிழாவின்போது அதிக ஒளிச்செறிவுடைய லேசர் விளக்குகள் மற்றும் அதிகளவிலான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் தாமதமின்றி பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான விசேட வசதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேவையான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதுடன், நோயாளிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக தேவையற்ற அச்சமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. கண் வலி, எரிச்சல், அதிக கண்ணீர் வடிதல், பார்வையில் மாற்றம் அல்லது கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் தாமதமின்றி வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21