yarlathirady.com

வெள்ளத்தால் உருக்குலைந்த நேபாளம்...!!

[2026-08-27 11:38:56] Views:[22]

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் நிலச்சரிவு காரணமாகப் போட்கோஷி ஆற்றில் உருவான 8 முதல் 10 மீற்றர் உயரமான பெரும் வெள்ள அலைகள் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.

இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

தற்போது வரை நேபாளைத்தைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 698 பேர் மாயமாகியிருப்பதாகவும் நேபாள அரசு அதிகாரப்பூர்வ தகவலைத் தெரிவித்துள்ளது.

அத்துடன்அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர Hot line +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21