yarlathirady.com

மணிக்கு மணி அதிகரித்துக்கொண்டே பலி எண்ணிக்கை..!

[2026-08-30 12:40:34] Views:[28]

நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து குறைந்தது 675 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களைக் காணவில்லை என்றும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, மேலும் 2,498 பேரைக் காணவில்லை என நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை தொகுத்ததன் படி, கடந்த ஆறு மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், முக்கியமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் , அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21