yarlathirady.com

ஊர்காவற்துறையில் பண்பாட்டு விழா!

[2026-09-09 18:22:16] Views:[52]

வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் நிதி அனுசரணையுடன், தீவகம் வடக்கு ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய பிரதேச பண்பாட்டுப் பெருவிழா பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி. வனஜா செல்வரட்ணம் தலைமையில் நேற்று (08) பிற்பகல் 2.00 மணிக்கு ஊர்காவற்றுறைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிய வருகிறது.


இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி. தர்சினி நிதர்ஷன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் (பதில்) திருமதி. மாலினி கிருஷ்ணானந்தன் மற்றும் மூத்த கலைஞர் திரு. ஆறுமுகம் யோகராசா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21