yarlathirady.com

ரஜினியின் ‘ஜெயிலர் 2’முன்பதிவிலேயே வசூல் வேட்டை

[2026-10-10 10:57:06] Views:[102]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் 15-ஆம் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ள நிலையில், ரிலீஸுக்கு முன்பே முன்பதிவு மூலமாகவே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தின் சிறப்பம்சங்கள்: சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால், சிவராஜ்கும்மார், ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்; ஹ்ரித்திக் ரோஷன் ஒரு சர்ப்ரைஸ் கேமியோவில் தோன்றுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பதிவு வசூல்: படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், உலகளாவிய முன்பதிவில் இப்படம் இதுவரை தோராயமாக இந்திய ருபாய் 11 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்து.