yarlathirady.com

மிகப் பழமையான அதிவேக வானொலி அலை வெடிப்பு கண்டுபிடிப்பு - ஆராய்ச்சிக்குழுவில் இலங்கை விஞ்ஞானி

[2026-10-10 11:20:56] Views:[27]

சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகப் பழமையான அதிவேக வானொலி அலை வெடிப்பைக் (Fast Radio Burst - FRB) கண்டறிந்துள்ளது.

மனிஷா காலேப் தலைமையிலான இந்த சர்வதேச ஆராய்ச்சிக்குழுவில் இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானி தெமிய நாணயக்கார (Themiya Nanayakkara) இடம்பெற்றுள்ளார்.

சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்மீன் மண்டலத்திலிருந்து தோன்றிய இந்த அலை வெடிப்பு , தென்னாப்பிரிக்காவில் உள்ள 'மீர்கேட்' (MeerKAT) வானொலி தொலைநோக்கி மூலம் 2024-ல் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியும் பயன்படுத்தப்பட்டு கண்டறியப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் அண்ட வலைகளை (cosmic web) வரைபடமாக்க விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.