யாழில் சட்ட விரோதமாக மணலை பதுக்கியவர் கைது..!!
[2026-10-10 11:30:05] Views:[26]
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் உரிய அனுமதியின்றிச் சட்டவிரோதமாக மணலைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அங்கு அனுமதியின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 8 கியூப் மணல் கைப்பற்றப்பட்டது.
கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட மணலே இவ்வாறு அரியாலை பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




