யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி
[2026-10-15 09:39:35] Views:[146]
யாழ்.மாவட்டத்திற்கு 2026ம் ஆண்டில் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகச் சுமார் 10,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துப் பொது நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.




