டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கையர் ஒருவர் நியமனம்.
[2026-10-18 09:42:45] Views:[40]
டெல்லி கேபிடல்ஸ் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமித்துள்ளது
கடந்த இரண்டு தொடர்களில் இந்தப் பொறுப்பில் இருந்த முனாப் படேலுக்குப் பதிலாக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள சமிந்த வாஸ், சர்வதேச அளவில் பயிற்சியாளராகவும் அனுபவம் பெற்றவர்.
அவரது சர்வதேச அனுபவமும் ஸ்விங் பந்துவீச்சில் உள்ள நிபுணத்துவமும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




