yarlathirady.com

நெடுந்தீவில் சுற்றுச்சூழல் மற்றும் பிரதியமைச்சர்கள் நேரில் ஆய்வு

[2026-10-18 16:31:42] Views:[22]

நெடுந்தீவுப் பகுதிக்கு நேரில் வருகை தந்த சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி மற்றும் சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி ஆகியோர், அங்கு நிலவும் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை நேரில் பார்வையிட்டனர்.

இப்பயணத்தின் போது, நெடுந்தீவு வாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு, இயற்கைச் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் உருவாகும் நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கு உரிய தீர்வுகளைக் காண்பது தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.