ஹாலிவுட் அளவுக்கு மிரட்டும் பிரம்மாண்டம் ‘ராமாயணா’
[2026-10-18 16:34:17] Views:[49]
வால்மீகியின் இதிகாச ராமாயணத்தை அடிப்படையாக வைத்து, இயக்குநர் நிதேஷ் திவாரி பெரும் பொருட்செலவில் 'ராமாயணா' திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்திய சினிமா உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், லட்சுமணனாக ரவி துபே, அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ரகுல் பிரீத் சிங் ஆகியோரும் களம் இறங்குகின்றனர். இரு பகுதிகளாக உருவாகும் இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5 அன்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளித் திருநாளன்றும் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய முன்னோட்டக் காட்சி (Trailer) வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ராமர்-ராவணன் மோதல் காட்சிகள் மிகக் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
அத்துடன், முப்புவனத்தையும் ஆளும் பேராற்றல் கொண்டவனாக ராவணனின் கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. சீதையைக் கடத்திச் செல்லும்போது ஜடாயு தடுத்துப் போராடும் காட்சி, ராமர்-சீதை இடையேயான உணர்வுபூர்வமான பிணைப்பு ஆகியவையும் இதில் காட்டப்பட்டுள்ளன.
2 நிமிடங்கள் 36 நொடிகள் ஓடக்கூடிய இந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளும் தத்ரூபமான கிராபிக்ஸ் (VFX) பணிகளும் ரசிகர்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளன. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.




