தேசிய மக்கள் சக்தியின் நூலகத்திற்கு வருகைதந்த கியூபா தூதுவர்.
[2026-10-19 11:24:59] Views:[84]
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கியூபா தூதுவர் பெகோ குவேரா, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நூலகத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்தார்.
அங்குள்ள நூலகத்தைப் பார்வையிட்ட அவர், தேசிய மக்கள் சக்தியின் கல்விப் பிரிவின் நடவடிக்கைகள், கல்வி சார்ந்த திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
மேலும், கடந்த இரு ஆண்டுகளில் தேசிய மக்கள் சக்தி அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அடங்கிய முக்கிய ஆவணம் ஒன்று இதன்போது கியூபா தூதுவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.




