இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பெரும்தொகை போதைப்பொருள் பறிமுதல்
[2026-10-19 11:53:54] Views:[32]
இந்தியாவின் தமிழ்நாடு கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற சுமார் 137 கிலோகிராம் மெத்தம்பைட்டமைன் போதைப்பொருளுடன் 04 நபர்களை இந்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் (DRI) அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 140 கோடி இந்திய ரூபாய் (இலங்கை மதிப்பில் பல பில்லியன் ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து வாகனங்கள் மூலம் நாகப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருளை, விசைப்படகுகள் மூலம் நடுக்கடலுக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பணமும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, இந்த சர்வதேச கடத்தல் பின்னணி குறித்து இந்திய பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




