ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினர் சோதனை..!
[2026-10-20 11:32:15] Views:[58]
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) பிரதான அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் தேடுதல் அனுமதியைப் பெற்று, ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள பழைய ஸ்ரீதர் திரையரங்கு கட்டிடத்தில் இயங்கும் இந்த அலுவலகத்தில் தீவிர தேடுதல் நடத்தப்பட்ட பிறகு, கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதன் நிர்வாகப் பொறுப்பாளர் ஆகியோரிடம் அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.




