yarlathirady.com

அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

[2026-10-20 11:36:52] Views:[124]

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை முதன்மை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும், முச்சக்கரவண்டியும் அல்லைப்பிட்டி பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த மூவர் பலத்த காயங்களுடன் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒரு பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளாதாக கூறப்படுகிறது.