yarlathirady.com

தெல்லிப்பளைப் பகுதியில் கசிப்புடன் பெண் உட்பட இருவர் கைது!

[2026-10-20 11:47:27] Views:[138]

யாழ்ப்பாணம், தெல்லிப்பளைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட இருவரை தெல்லிப்பளைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது இவர்கள் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 30,000 மில்லி லீற்றர் கசிப்பு, 95,250 மில்லி லீற்றர் கோடா, இரண்டு எரிவாயு சிலிண்டர்கள், ஒரு கம்பிச்சுருள், அடுப்பு மற்றும் கசிப்பு காய்ச்சப் பயன்படுத்திய பல்வேறு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.