yarlathirady.com

யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்திய கலை நிகழ்வு!

[2026-10-24 19:34:32] Views:[187]

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் இணைந்து, வட மாகாண பண்பாட்டலுவல்கள் பிரிவின் அனுசரணையோடு நடாத்திய 'யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026' நேற்றைய தினம் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும் பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார்.

மேலும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான திரு. இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

மதிய வேளையில் மாவட்டச் செயலகத்தின் பிரதான வாயிலில் இருந்து கலைப் பேரணி தொடங்கியது. இதில் ஒயிலாட்டம், கோலாட்டம், காவடி, சுளகு நடனம் மற்றும் பொம்மலாட்டம் போன்ற தமிழர்களின் பாரம்பரியக் கலைவடிவங்கள் அணிவகுத்து வந்தன.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகளில் காலிங்க நர்த்தனம், தொன்மைமிக்க கூத்திசைப் பாடல்கள், வீரக் குழுநடனம், கரகாட்டம் போன்ற பல்வேறு கலைப் படைப்புகள் அரங்கேற்றப்பட்டன. விழா மேடையில் கலைத்துறையில் தடம் பதித்த மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருதும், வளர்ந்துவரும் இளம் திறமையாளர்களுக்கு “இளங்கலைஞர்” விருதும் வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டது.