வடக்கு மாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக செ.ரகுநாதன்
[2026-10-28 16:02:33] Views:[37]
வடக்கு மாகாணத்தின் பிரதமஉள்ளகக் கணக்காய்வாளராக செ.ரகுநாதன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நியமித்துள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் நேற்று (27) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டார்.




