KGF 3யில் அஜித்
[2024-07-24 12:30:16] Views:[210] நடிகர் அஜித் கே.ஜி.எப் 3யில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது KGF படத்தின் இரண்டாம் பாகம் உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடி சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.
தற்போது கே.ஜி.எப் 3 எப்போது என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்ற போது அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தன.
இச்சூழலில் KGF 3 ல் அஜித் இணையப்போவதாக வந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்டாக மாறியுள்ளது.
மேலும் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்போ இதுவரை வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.