yarlathirady.com

வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்

[2026-07-27 19:31:56] Views:[37]

எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், சென்சார் சான்றிதழ் தாமதம் ஆனதால், தயாரிப்பு தரப்பு நீதிமன்றம் சென்றது. இதனால் மேலும் தாமதமானது.

பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் ஜனநாயகன்', கடந்த 23 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம், முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

இதற்கு முன் விஜயின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.147 கோடியை வசூலித்தது. ‘தி கோட்’ படமும் முதல் நாள் ரூ.100 கோடியை தாண்டிய வசூலித்தது.

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின் படி, 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.217.48 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வார இறுதி விடுமுறை மற்றும் ரசிகர்களின் தொடர் ஆதரவு காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

ஆனால் அந்த கணிப்புகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.

படத்தின் டைட்டில் கார்டில் 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்' நடிப்பில் எனத் திரையில் வரும்போது, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.