விஜய்யின் கடைசி படம் தளபதி 69
[2024-10-05 11:15:40] Views:[360] நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 என்பதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகிய வண்ணமாகவே உள்ளது.
ஹெச். வினோத் தளபதி 69 படத்தை இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கவுள்ள பிரபல நடிகர்கள், நடிகைகள் குறித்து அப்டேட் தொடர்ந்து வெளிவந்தது. பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் கமிட்டாகியுள்ளனர். இந்த நிலையில், தளபதி 69 படத்தின் பூஜை நேற்று காலை நடைபெற்று முடிந்துள்ளது.
பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளனர்.