yarlathirady.com

மாமூத் யானையின் உடல் மீட்பு

[2024-12-25 12:07:24] Views:[231]

50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானைக் குட்டியின் உடலை ரஷ்யா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சைபீரியாவில் உள்ள யாகுடியா பகுதியில் பெர்மாஃப்ரோஸ்ட் எனப்படும் உறைநிலையில் உள்ள இடத்தில் இருந்து இது மீட்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெண் யானை என்று அறியப்படும் நிலையில், இதற்கு ‘யானா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.


இதற்கு முன்னர் 6 மாமூத் யானைகளின் உடல்கள் உலகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், 5 ரஷ்யாவிலும், 1 கனடாவிலும் கண்டெடுக்கப்பட்டன. தற்போது கண்டெடுக்கப்பட்ட யானையின் வயது 1 அல்லது சற்றே அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.


யாகுட்ஸ்க் பகுதியில் உள்ள ஃபெடரல் பல்கலையில் வைக்கப்பட்டுள்ள இந்த யானையின் உடல் 180 கிலோ (397 பவுண்டுகள்) எடையும்,120 சென்டிமீட்டர் (நான்கு அடி) உயரம் மற்றும் 200 சென்டிமீட்டர் நீளமும் கொண்டுள்ளது.


இவ்வளவு சிறப்பாக பதப்படுத்தப்பட்ட யானையின் உடல் தங்களை ஆச்சரியப்படுத்துவதாகக் கூறும் ஆய்வாளர்கள் இது ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு என்று தெரிவித்தனர். மாமூத் யானையின் உடல் தோண்டியெடுக்கப்பட்ட படாகிகா ஆய்வு மையத்தின் அருகில் இதற்கு முன்னர் மிகப் பழமையான குதிரை, காட்டெருமை மற்றும் லெம்மிங் எனப்படும் எலியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.


சினிமாசெய்திகள்
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மர்மர் திரைப்படம்
2025-03-10 12:20:48
ரசிகர்களின் பேராதரவை பார்த்து தற்போது 330 திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி
2025-03-01 11:55:11
அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.