மாமன் படம்
[2025-05-18 10:32:01] Views:[290] நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கி, இன்று ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் சூரி. விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகி, பின் கருடன், விடுதலை 2, கொட்டுக்காளி என தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். சூரி நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளிவந்த திரைப்படம் மாமன்.
இப்படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
எமோஷனல் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளை விட இரண்டாவது நாளில் வசூலில் நல்ல பிக்கப் ஆகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.