yarlathirady.com

எங்களின் இலக்கு வைத்தியசாலை அல்ல - ஈரான் தெரிவிப்பு:

[2025-06-22 07:56:14] Views:[31]

இஸ்ரேல் வைத்தியசாலையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக இஸ்ரேலின் இராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம் என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல் மோதலின் 7 ஆவது நாளான நேற்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் சொரோகா வைத்தியசாலை சேதமடைந்ததோடு 89 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொரோகா வைத்தியசாலை தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் அரச ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில்,

“இஸ்ரேலில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எங்கள் இலக்கு இஸ்ரேல் இராணுவத் தளம் மற்றும் உளவுப் பிரிவு தளம் மட்டுமே. அவை கவ்-யாம் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ளன. அந்தப் பூங்காவுக்கு அருகே தான் சொரோகா வைத்தியசாலை உள்ளது.

நாங்கள் நடத்திய தாக்குதலின் அதிர்வலைகளால் ஏற்பட்ட பாதிப்புதான் வைத்தியசாலையில் உணரப்பட்டதே தவிர, எங்களின் இலக்கு வைத்தியசாலை அல்ல” என்று தெரிவித்துள்ளது.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.