yarlathirady.com

இலங்கைக்கு கடத்த இருந்த 240 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

[2025-07-31 12:12:56] Views:[46]

இலங்கைக்கு கடத்தும் நோக்கில் சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் 7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறி பொருட்களை ஏற்றிச் சென்று சரக்குகளை ஆந்திரா வில் இறக்கிய பின்பு அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர் இரு தினங்கள் அங்கு இருந்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை நோக்கி நேற்று புதன்கிழமை (30.07.2025) வந்துள்ளார்.

அப்போது வேம்பார் கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான வாகனம் நின்று கொண்டதை பார்த்த காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியுள்ளார்.

தொடர்ந்து, மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவற்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் வாகனத்தை சோதனையிட்ட போது வாகனத்தில் தக்காளி கூடை களுக்கு பின்புறம் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 240 கிலோ கஞ்சாவை காவற்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் சர்வதேச மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த நாஞ்சில் ராஜ்-டம் விசாரணை மேற்கொண்ட போது படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவற்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.