yarlathirady.com

வெற்றிமாறன் இயக்கத்தில் STR 49: வெளியானது அதிரடியான அறிவிப்பு.

[2025-09-04 21:36:08] Views:[42]

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ள சிம்பு தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இது அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும். இந்த படம் ஒரு வடசென்னை பின்னணியில் உருவாகும் கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது.

சிம்பு இந்த படத்தில் இரண்டு வேறுபட்ட தோற்றங்களில் நடிக்கிறார். இதற்காக அவர் தனக்கு ஏற்ற தோற்றத்தை பெற கடுமையான உடற்பயிற்சி மூலம் 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த சில நாட்களாகவே படமாக்கப்பட்டு, தற்போது அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் இந்த வீடியோ வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இன்று படக்குழு ஒரு சிறப்பு புரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இப்படம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.