பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இலங்கை.
[2025-11-28 13:03:14] Views:[18]
ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாட இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கடைசி இரண்டாம் கட்ட லீக் போட்டியில் 6 ஓட்டங்களால் இலங்கை மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியதன் மூலமே இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
காமில் மிஷார குவித்த அபார அரைச் சதமும் துஷ்மன்த சமீரவின் 4 விக்கெட் குவியலும் இலங்கையின் வெற்றியை சாதகமாகியது.










