விண்ணில் ஏவப்பட்ட இந்திய ராக்கெட் தோல்வி..!
[2026-01-13 12:05:41] Views:[7]
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், முதல் இரண்டு நிலைகளை வெற்றிகரமாக கடந்த நிலையில், மூன்றாவது நிலையில் திடீரென தனது பயண பாதையிலிருந்து திசை மாறியது. இதனால் திட்டமிட்டபடி செயற்கைக்கோள்களை அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது.
இந்தத் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், "மூன்றாவது நிலை செயல்பாட்டின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் வழித்தடம் மாறியுள்ளது. இதற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய தரவுகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். தோல்விக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, விரைவில் சரிசெய்யப்படும்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










