yarlathirady.com

தெறி ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு என படக்குழு அறிவிப்பு..!!

[2026-01-19 22:06:42] Views:[76]

தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த திரைப்படங்களில் ஒன்று, நடிகர் விஜய்யின் “தெறி”, தற்போது ரீ-ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் எஸ். தாணு அறிவித்தார். ரிலீஸ் ஆனபோது கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தெறி திரைப்படத்தை மீண்டும் 23 ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர் என கூறப்படுகிறது.

ஆனால், தெறி ரீ-ரிலீஸ் அறிவிப்புக்குப் பிறகு, அதே நாளில் வெளிவரும் “திரௌபதி 2” திரைப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி தயாரிப்பாளர் எஸ். தாணுவிடம் ஒரு தனிப்பட்ட கோரிக்கை விடுத்தார். திரௌபதி 2 திரைப்படம் அதே நாளில் வெளிவருவதால், இரு படங்களும் ஒரே நாளில் மோதுவதைத் தவிர்க்க, தெறி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றக் கோரினார்.

இந்த கோரிக்கையை எஸ். தாணு ஏற்று, தெறி ரீ-ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தார். இதுபற்றி இயக்குநர் மோகன் ஜி தனது சமூக வலைத்தள கணக்கில், “எங்களின் வேண்டுகோளை ஏற்று விஜய் சாரின் தெறி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்த கலைப்புலி தாணு சார் அவர்களுக்கு என் தயாரிப்பாளர் மற்றும் எங்கள் திரௌபதி 2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.