இந்தியாவில் ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை..!
[2026-01-25 20:54:33] Views:[7]
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானை ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 1 முதல் 9 ஆம் திகதி வரை மேற்கு சிங்பூம் பகுதியில் 19 கிராமவாசிகளும் ஒரு வனவிலங்கு அதிகாரியும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வனவிலங்கு அதிகாரிகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி குறித்த யானையைக் கண்காணித்து வந்தாலும், அதைப் பிடிக்க முடியாதுள்ளதாக கூறப்படுகிறது.










