yarlathirady.com

இந்த வாரம் வரிசையாக வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்கள்.

[2026-02-11 12:11:24] Views:[57]

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் வெளியாவது வளமை அதேபோல், இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் முக்கியமான நாலு திரைப்படங்கள் குறித்து விரிவான தகவலை பார்ப்போம்.

லாக் டவுன்
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளதோடு, தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குனராக ஏஆர் ஜீவா களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்திற்கான இசையை என்ஆர் ரகுநந்தன், சித்தார்த் விபின் ஆகியோர் வழங்கி உள்ளனர்.

இந்த படம் சமூக, குடும்ப மற்றும் அனுபவம் என்பவற்றை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.

கருப்பு பல்சர்
இந்த படத்தை இயக்குனர் முரளி கிரஷ் இயக்கியுள்ளதோடு, இதில் அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா, மன்சூர் அலிகான் என்பவர்கள் நடித்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு மற்றும் மதுரை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திரை உலகில் கிராமிய சூழ்ச்சியுடன் நடைபெறும் சண்டை மற்றும் அதிரடி காட்சிகளும் காணப்படுகின்றன.

க்ராணி
இந்த படத்தில் வடிவுக்கரசி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் அவருடன் சிங்கம் புலி, ஆனந்த் நாக் போன்றவர்கள் நடித்துள்ளதோடு இந்த படத்தை விஜயகுமாரன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை விஜயா மேரி யுனிவர்ஸ் மீடியா தயாரித்துள்ளதோடு தயாரிப்பாளராக விஜயா மேரி காணப்படுகின்றார்.

மேலும் இந்த படத்திற்கான இசையை சீ.டா. பாண்டியன் வழங்கி உள்ளதோடு, இந்த படம் ஹாரர் தில்லர் ரேஞ்சில் எடுக்கப்பட்டுள்ளது

திரைவி
இந்த படத்தின் இயக்குனராக கார்த்தி தட்சிணாமூர்த்தி காணப்படுவதோடு இந்த படத்தில் முனிஷ் காந்த், அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சஷன் சரவணன், வினோத் சாகர் ஆகியோர்கள் நடித்துள்ளனர். இந்த படம் குடும்பம், நட்பு, காதல் போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

காந்தி டாக்ஸ்
விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்த இந்த படத்தை, கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கியுள்ளார். அரசியல் மற்றும் சட்ட சூழ்ச்சிகளை மையமாகக் கொண்டு திரில்லர் பாணியில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது . இந்த படம் வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.


சினிமாசெய்திகள்
வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்
2026-07-27 19:31:56
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூர்யா மறுத்த படங்கள்:மற்றைய நடிகர்களுக்கு மெகா ஹிட்
2026-07-26 17:48:37
நடிகர் சூர்யா, தனது தனித்துவமான கதைத்தேர்வு மற்றும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில முக்கியமான திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்
2026-07-23 21:45:11
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
10 விருதுகளை அல்லி குவித்த தமிநாடு சினிமா கலைஞர்கள்!
2026-07-20 21:36:58
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசினால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிமான்ட்டி காலனி 3 க்கு ‘A’ சான்றிதழ்..!!
2026-07-18 12:27:32
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைகளைத் தாண்டி வருகிறது ஜனநாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்.
2026-07-16 15:38:52
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் .23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.