இந்தியாவில் கேரள மாநிலத்தின் பெயர் மற்றம்.
[2026-02-25 21:02:38] Views:[7]
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான அம்மாநில அரசின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
பெயரை மாற்றக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 3-ன் படி, மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி கேரள மாநில சட்டப்பேரவையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றக் கோரி 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அம்மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.










