yarlathirady.com

அயோத்தி தலைமை அர்ச்சகர் தலைமையிலான குழு யாழிற்கு விஜயம்

[2026-02-25 21:08:12] Views:[7]

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஜெட்விங் விடுதிக்குச் சென்றனர்.

அங்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதன்போது, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்த ஆளுநர், வடக்கு மாகாண சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் விசேடமாக வெளியிடப்பட்ட 'சிவன் யாத்திரைப் பாதை' மற்றும் 'இராமாயண யாத்திரைப் பாதை' ஆகிய நூல்களையும் வழங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.


சினிமாசெய்திகள்
கமல்-ரஜினி நடிக்கும் படத்தின் வில்லன் மம்மூட்டியா..!!
2026-02-28 15:20:20
தமிழ் திரையுலகின் இரு மகா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியாகியதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘கல்கி 2ம் பாகம்’ படப்பிடிப்பில் கமல் - அமிதாப்.
2026-02-26 20:37:40
இந்திய திரையுலகை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,
டிராகன் 2 - ரசிகர்கள் குஷி
2026-02-22 12:04:45
டிராகன் 2
எதிர்நீச்சலில் இருந்து வெளியேறிய நடிகை
2026-02-22 11:00:41
சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது
AK 64 படம் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள்.
2026-02-20 10:32:09
AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.