yarlathirady.com

கச்சதீவு புனித அந்தோனியார் தேவஸ்தான வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்.

[2026-02-26 20:28:59] Views:[7]

கச்சதீவு புனித அந்தோனியார் தேவஸ்தான வருடாந்த திருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் நடைபெறவுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை மாலை ஆராதனையும், மாலை வழிபாடுகளும் நடைபெறும். மறுநாள் சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணியிலிருந்து பகல் ஒரு மணி வரை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை நோக்கிய பேருந்து பயணங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன

குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இங்கே போக விரும்புகின்றவர்கள் குறுக்கட்டுவான் இறங்கு துறையிலே தங்களுடைய அடையாள அட்டையை காட்டி தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.

வேறு எங்கும் அந்தப் பதிவுகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதே வேளையிலே, இங்கு போகின்ற யாத்திரியர்கள் வெள்ளிக்கிழமைக்கு தேவையான உணவுகளைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வெள்ளிக்கிழமை இரவு உணவு அங்கே வழங்கப்பட மாட்டாது. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலி முடிந்த பிற்பாடு காலை உணவு யாத்திரியர்கள் எல்லாருக்கும் வழங்கப்படும்.

அதேவேளை படகு சேவையின் ஒரு வழி கட்டணமாக 1,200 ரூபாய் அறவிடப்படும். அங்கு செல்வோர் தேவையான குடிநீரையும் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை திகதி பகல் ஒரு மணிக்குப் பின்னர் படகு சேவைகள் இடம்பெற மாட்டாது என கூறப்படுகிறது.

அத்துடன் இந்த வருடம் இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையிலே நூற்றுக்கு மேற்பட்ட குருக்கள் துறவிகள் அங்கே வருகின்றார்கள். அதே வேளையில் இலங்கையிலிருந்தும் யாழ். மறை மாவட்ட குருமுதல்வருடன் ஐம்பதுக்கு மேற்பட்ட குருக்கள் துறவிகள் இந்தத் திருநாளிலே பங்கு பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
கமல்-ரஜினி நடிக்கும் படத்தின் வில்லன் மம்மூட்டியா..!!
2026-02-28 15:20:20
தமிழ் திரையுலகின் இரு மகா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியாகியதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘கல்கி 2ம் பாகம்’ படப்பிடிப்பில் கமல் - அமிதாப்.
2026-02-26 20:37:40
இந்திய திரையுலகை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,
டிராகன் 2 - ரசிகர்கள் குஷி
2026-02-22 12:04:45
டிராகன் 2
எதிர்நீச்சலில் இருந்து வெளியேறிய நடிகை
2026-02-22 11:00:41
சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது
AK 64 படம் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள்.
2026-02-20 10:32:09
AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.