yarlathirady.com

உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் தொடர்பான செய்தி

[2026-02-27 14:54:13] Views:[7]

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல், 15 ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரதம்), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
கமல்-ரஜினி நடிக்கும் படத்தின் வில்லன் மம்மூட்டியா..!!
2026-02-28 15:20:20
தமிழ் திரையுலகின் இரு மகா நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியாகியதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘கல்கி 2ம் பாகம்’ படப்பிடிப்பில் கமல் - அமிதாப்.
2026-02-26 20:37:40
இந்திய திரையுலகை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கல்கி 2898 ஏடி – 2” படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,
டிராகன் 2 - ரசிகர்கள் குஷி
2026-02-22 12:04:45
டிராகன் 2
எதிர்நீச்சலில் இருந்து வெளியேறிய நடிகை
2026-02-22 11:00:41
சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது
AK 64 படம் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள்.
2026-02-20 10:32:09
AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.