யாழ். பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது..!!
[2026-03-01 19:51:36] Views:[13]
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 02 பெண்கள் உள்ளிட்ட 13 நபர்களை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
யாழ் நகரில் மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையடித்த ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு உடைத்து நான்கரை இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
மேலும் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டமை குறிபிடத்தக்கது.










